fbpx

பறவை மூக்கு வடிவிலான மாஸ்க் அணிந்து உணவு உட்கொள்ளும் சீனர்…!

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்திருப்பது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. ஆனால் இதுவரை கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியுலகிற்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் சீன மக்கள் தங்களை கொரோனாக்களில் இருந்து பாதுகாக்க வெந்நீரில் ஆவிப்பிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற விட்டமின் சி பழங்களை உட்கொள்வது போன்ற பழக்கங்களை கையாண்டுவருகின்றனர். இந்த நிலையில், பறவை மூக்கு வடிவத்திலான முகக்கவசத்துடன் ஒருவர் சாப்பிடும் வீடியோ டிவிட்டரில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், கொரோனா காலத்தில் தனது பங்குச்சந்தை முதலீட்டை ஒப்பிட்டு சபீர் என்பவர் தனது டுவிட்டரில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Kokila

Next Post

தவறு செய்யலாமாம் ஆனால் தண்டனை வழங்க கூடாதாம்! நீதிமன்ற வளாகத்திலேயே விஷமறிந்தி தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி!

Sat Dec 24 , 2022
ஒரு சிலர் தவறுகள் செய்யும்போது நாம் செய்வது தவறு என்று உணர்ந்து கொள்வதில்லை. ஆனால் தவறை செய்து முடித்துவிட்டு அதன் பிறகு அந்த தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக பல விபரீத முடிவுகளை மேற்கொள்வார்கள். அந்த விபரீத முடிவானது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாக்கிவிடும். அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம் நந்தநல்லூரை அடுத்துள்ள பொட்டல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுடலை(53). இவர் கடந்த […]

You May Like