fbpx

நடு ரோட்டில் கல்லூரி மாணவர் குத்திக் கொலை –  முன்னாள் காதலன்  வெறிச்செயல்!

மும்பை மாநகரின் பரபரப்பான சாலையில் 19 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பாக இருக்கிறது.  கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .

மும்பை நகரின் செம்பூர் பகுதியைச் சார்ந்தவர் முக்தார் ஷேக் 19 வயதான இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த இரண்டு மர்ம நபர்கள்  முக்தாரை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமாறியாக குத்தினர். இதில் நிலைகுலைந்த முத்தார் ரத்த வெள்ளத்தில் அங்கேயே விழுந்தார்.

படுகாயமடைந்த முக்தாரை அங்கிருந்தவர்கள் மீட்டு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முக்தார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தத் தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் விசாரணையில் சில தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. காவல்துறையினரின் விசாரணையின் படி முக்தார் சேக்கும் பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் முன்னாள் காதலன் அவனது நண்பனோடு சேர்ந்து  திட்டம் தீட்டி முக்தாரை கொலை செய்திருப்பது தெரிய  வந்திருக்கிறது. தப்பி ஓடிய முன்னாள் காதலன் மற்றும் அவரது நண்பரை  சுண்ணாபட்டி போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். காதல் பிரச்சினையால் கல்லூரி மாணவர் பரபரப்பான சாலையில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவர் காதலித்து வந்த பெண் யார்? அவரது முன்னாள் காதலன் மற்றும் நண்பர்கள் யார் யார்? என  காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில்  விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Rupa

Next Post

இனி உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிடாதீர்கள்.... உயிருக்கு ஆபத்து!

Sat Feb 4 , 2023
உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ள அக்ரிலாமைடு என்னும் கெமிக்கல் புற்றுநோயை உண்டாக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி புற்றுநோயை ஏற்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் கருதப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயில் தொடங்கி கல்லீரல், மூளை, பெண்களுக்கு கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என பல வகையில் புற்றுநோய் மனிதர்கள் ஆட்டிப்படைக்கிறது. புற்றுநோய் வருவதற்கு நாம் அன்றாடம் உண்ணும் சில உணவுகளே முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. […]
இனி உருளைக்கிழங்கு சிப்ஸை சாப்பிடாதீர்கள்.... உயிருக்கு ஆபத்து!

You May Like