fbpx

நடு நடுங்கிய ஈரோடு, தலையில் கல்லை போட்டு, படுகொலை செய்யப்பட்ட திமுக கவுன்சிலர்….! காரணத்தைக் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்…..!

கரூர் அருகே திமுகவின் பெண் கவுன்சிலர் கொடூரமான முறையில் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ஆளும் கட்சியின் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த ரூபா என்பவர் திமுகவின் கவுன்சிலராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் தங்கராஜ் காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். அதோடு மட்டுமல்லாமல், ரூபா கரூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், வேலைக்கு கிளம்பி சென்ற ரூபா மாலை வீடு திரும்பவில்லை. இதனால், அவருடைய கணவர் அதிர்ச்சி அடைந்து, அவரை பல இடங்களிலும் தேட தொடங்கினார்.

பின்னர் மனைவியின் செல் போன் நம்பருக்கு டயல் செய்த தங்கராஜ், அவருடன் பேச முடியாததால் பதற்றம் அடைந்து, பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனாலும், ரூபாவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் இதுகுறித்து ரூபாவின் மகன் புகார் வழங்கியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான் பாலமலை பகுதியில் இருக்கின்ற ஒரு காட்டுப் பகுதியில், ஒரு பெண் தலையில் பலத்த காயங்களோடு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கே உயிரிழந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான் அங்கு உயிரிழந்து கிடந்தது ரூபா தான் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரூபாய் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர், இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் வந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அதோடு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும், இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கரூர் அருகே உள்ள நொய்யல் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ஒரு தம்பதிகள் கவுன்சிலர் ரூபாவை கொலை செய்திருக்க கூடும் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அந்த தம்பதிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதாவது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த தம்பதிகள் தான் கவுன்சிலர் ரூபாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர் என்ற உண்மை தெரிய வந்தது. அந்த தம்பதிகள் ஏற்கனவே கடன் பிரச்சினையில் இருந்ததால், ரூபா அணிந்திருந்த நகைக்காக அவரை படுகொலை செய்தனர் என்ற உண்மை காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Next Post

திருப்பதி கோவிலுக்கு போறீங்களா… ரயில்கள் திடீரென ரத்து; முழு விவரம் இதோ!

Thu Sep 28 , 2023
சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இருந்தும் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்களின் வருகை பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில் […]

You May Like