fbpx

பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை.! திருச்சூரில் சோக சம்பவம்.!

கேரளாவில் உள்ள திருச்சூரில், இளம் பெண் மருத்துவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர், இது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கருவனூர் பாலத்திலிருந்து குதித்து, 26 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் ட்ரேசி வர்க்கீஸ் என்றும் அவர் திருச்சூரில் உள்ள அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசிக்கும், ஆயுர்வேத மருத்துவர் என்றும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட பெண்ணின் கூற்றுப்படி, கடந்த வெள்ளிக்கிழமை 12.30 மணி அளவில், இறந்த அந்தப் பெண் பாலத்தின் மையத்தை நோக்கி சென்றுள்ளார். தனது காலணிகளை அகற்றிவிட்டு, பாலத்தின் மீதேறி ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த இறஞ்சலக்குடா மற்றும் சேர்ப் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்றனர். பிற்பகல் 3 மணி அளவில் பள்ளிக்கடவு பகுதியிலிருந்து அந்தப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. பலரது உயிரைக் காப்பாற்றும் மருத்துவர், தனது உயிரை மாய்த்துக் கொண்டது அங்கிருந்தவர்களை துயரில் ஆழ்த்தியது.

Next Post

"பிரதமரின் விளம்பர தூதுவரா ஜனாதிபதி.?.." பட்ஜெட் உரை குறித்து காங்கிரஸ் தலைவர் கேள்வி..!!

Sat Feb 3 , 2024
2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதல், எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. இந்திய வரலாற்றிலேயே கேவலமான பட்ஜெட் இதுதான் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இது தொடர்பாக பல்வேறு கட்சியினரும் தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஜனாதிபதியின் […]

You May Like