fbpx

“ச்சீ… நீ எல்லாம் ஒரு மனுசனா.”? ‘AI’ பயன்படுத்தி குடும்ப பெண்களை ஆபாசமாக சித்தரித்த நபர்.! சைபர் க்ரைம் நடவடிக்கை.!

தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்து வந்தாலும் அதனைத் தவறான வழியில் பயன்படுத்தும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண்களை தவறான வகையில் சித்தரித்து ஆபாசமான புகைப்படங்களை பதிவு செய்திருப்பதாக உசிலம்பட்டியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய குடும்ப பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் மர்ம நபர் ஒருவர் வெளியிட்டு வருவதாக சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை துவக்கினர்.

விசாரணையின் போது, இந்த சம்பவத்தை செய்தவர் உசிலம்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்கள், சமூக ஊடகங்களில் வெளியிடும் புகைப்படங்களை திருடி ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு, புகைப்படங்களை மார்ஃபிங் செய்து, நிர்வாணமாக வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்டவரிடமிருந்து செல்போனைக் கைப்பற்றிய போலீசார், அவரை நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தில் சைபர் கிரைம் அதிகாரிகள் விரைவாக குற்றவாளியை கண்டுபிடித்தது, மக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.

Next Post

கர்நாடகா: "துணிகளை கிழித்து.." மாணவன் தலையில் அம்பேத்கர் படம்.!! பதற வைக்கும் காட்சிகள்.! அதிர்ச்சி வீடியோ.!

Sun Jan 28 , 2024
கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் பள்ளி விடுதி ஒன்றில் மாணவன் அரை நிர்வாணமாக்கப்பட்டு தலையின் அம்பேத்கர் படத்தை சுமந்தபடி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் இயங்கி வரும் மாணவர் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது […]

You May Like