fbpx

#அசாம் : உயிரிழந்த காதலியின் சடலத்துடன் திருமணம் செய்துகொண்ட காதலன்..! 

அசாம் மாநில பகுதியில் உள்ள மோரிகானில் பிடுபன் என்ற 27 வயது இளைஞரும், பிரத்தனா போரா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காதலி உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இறந்த அந்த பெண்ணையே திருமணம் செய்த காதலனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. 

இருவரின் காதல் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில், இரு குடும்பத்தாரும் திருமணம் செய்து வைக்க ஒப்புதல் செய்திருந்தனர். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் , சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காதலியின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன், இறப்பு சடங்கிற்கு வந்த நிலையில் அனைவரது முன்னிலையிலும் உயிரிழந்த தன் காதலியின் சடலத்திற்கு மாலை அணிவித்து அவரையே திருமணமும் செய்துள்ளார்.

என்னுடைய வாழ்நாள் முழுவதும் நீ மட்டும் தான் என் மனைவி என்றும், நான் இறக்கும் வரை உன்னை மட்டும் நினைத்துக்கொண்டு இருப்பேன். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என தன்னுடைய காதலியின் சடலத்திற்கு முன்பு சத்தியம் செய்தார்.காதலித்த அந்த பெண் ஆசைப்பட்டது போல தனது காதலருடன் திருமணம் நடைபெற்றது.காதலன் செய்த இந்த நிகழ்ச்சியை கண்டு அனைவரும் இருவரின் காதலனைக் கண்டு  மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர். 

Rupa

Next Post

நள்ளிரவில் அலறல் சத்தம்..!! ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்..!! ஓட்டம் பிடித்த கணவர்..!! சென்னையில் பயங்கரம்..!!

Sun Nov 20 , 2022
சென்னையில் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரைச் சேர்ந்தவர் பவித்ரா (28). இவர் செங்குன்றத்தை சேர்ந்த ரெஜிஸ் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, பவித்ரா பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பவித்ரா […]

You May Like