fbpx

பயங்கரம்…! இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வு பகுதி… 45 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று…!

இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும். அதேநேரம், தெற்கு அந்தமான் கடல் பகுதி, அதை ஒட்டிய பகுதி களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் 20-ம் தேதி வரை மழை நீடிக்கும்.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம். புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

17-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும். 18-ம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 17, 18-ம் தேதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

A low-lying area over the southeast Bay of Bengal today… Cyclonic winds gusting to 45 kmph

Vignesh

Next Post

ஜன 10-ம் தேதிக்குள்... பொங்கலுக்கு 15 ரக சேலைகள்... 5 விதமான வேட்டி...! அமைச்சர் சூப்பர் அறிவிப்பு...!

Sun Dec 15 , 2024
By January 10th... 15 types of sarees for Pongal... 5 types of dhoti...! Minister's super announcement

You May Like