fbpx

ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஜகா வாங்கிய புது மாப்பிள்ளை! ஆண்மை பரிசோதனைக்குச் சென்ற மாமியார் குடும்பம்! அவமானத்தில் வெறி செயல்!

திருமணமான இரண்டே வாரங்களில் புது மாப்பிள்ளை தனது தந்தையுடன் சேர்ந்து அவரது மனைவி மற்றும் மாமியாரை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சார்ந்தவர் பிரசாந்த் இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் சரவணன் பி.டெக் பட்டதாரியான அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள வங்கியில் வேலை கிடைத்தது. இந்நிலையில் தங்களது மகன் சரவணனுக்கு தெலுங்கானா மாவட்டம் வனபர்த்தியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு மற்றும் ராமாவதி தம்பதியரின் மகள் ருக்மணியை மார்ச் மாதம் ஒன்றாம் தேதி திருமணம் செய்து வைத்தனர் .

இந்நிலையில் அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சரவணன் தாம்பத்தியத்தில் நாட்டமில்லாமல் இருந்து வந்தார். இது தொடர்பாக அவரது மனைவி தனது பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அவர்கள் சரவணனிடம் இது குறித்து கேட்டதுடன் அவரை ஹைதராபாத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனையும் செய்துள்ளனர். மேலும் முதலிரவு நடக்காதது குறித்து அக்கம் பக்கத்தினர் இடமும் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அவமானப்பட்டதாக உணர்ந்த சரவணன் தனது தந்தையிடம் இதுகுறித்து தெரிவித்திருக்கிறார். தனது மகனை அவமானப்படுத்திய மருமகளையும் அவரது குடும்பத்தினரையும் தீர்த்து கட்ட திட்டம் போட்டுள்ளனர். இதன்படி சரவணன் தனது மனைவியையும் அவரது பெற்றோரையும் கர்னூரில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாடியில் வைத்து சரவணன் ருக்மணியை கத்தியால் வெட்டி கொலை செய்தார். கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவரது தந்தை வெங்கடேஸ்வரலு மற்றும் தாய் ரமா தேவியை சரவணனின் தந்தை பிரசாத் வெட்டி இருக்கிறார். இதில் ரமா தேவி சம்பவ இடத்திலேயே பலியாகி விட வெங்கடேஸ்வரலு காயத்துடன் தப்பி ஓடியுள்ளார். அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெங்கடேஸ்வரலுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ராமதேவி மற்றும் ருக்மணி ஆகியோரின் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாத் மற்றும் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Rupa

Next Post

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 6 வயது குழந்தை! மருத்துவமனை டீன் செய்தியாளர்களுக்கு விளக்கம்!

Wed Mar 15 , 2023
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வதந்தி பரவியதால் மருத்துவமனை டீன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சார்ந்தவர் முனீஸ்வரன் கூலி தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற ஆறு வயது மகள் இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனது மகளை அனுமதித்தார் முனீஸ்வரன். தீவிர சிகிச்சை பிரிவில் […]

You May Like