fbpx

‘ட்விட்டரில்’ வைரலாகும் சினிமா தாத்தாவின் டேட்டா டைரிக் குறிப்பு!

தமிழகத்தைச் சார்ந்த அக்ஷய் என்ற இளைஞர் தனது தாத்தாவை பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி சினிமா ரசிகர்களிடமும் ட்விட்டர் பயனாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. தமிழகத்தைச் சார்ந்த சினிமா ரசிகரான இவர் ட்விட்டரில் சினிமா பற்றிய செய்திகளை பகிர்ந்து வந்திருக்கிறார் இந்நிலையில் தனது தாத்தாவின் டைரியில் இருந்த சில பக்கங்களை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவேற்றி இருக்கிறார் இந்த இளைஞர். இந்த புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

சினிமாவின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த இவரது தாத்தா, தான் திரையரங்குகளில் சென்று ரசித்த திரைப்படங்களை ஒரு டைரியில் குறிப்பு எடுத்து வைத்திருக்கிறார். மேலும் அந்தத் திரைப்படங்களைப் பற்றிய குறிப்புகளையும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அந்தக் குறிப்புகளில் 1966 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ‘அன்பே வா’ என்ற திரைப்படம் 1961 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ‘கம் செப்டம்பர்’ என்ற திரைப்படத்தின் தாக்கத்தால் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவர் இரண்டு திரைப்படங்களையும் தியேட்டருக்கு சென்றும் பார்வையிட்டு இருக்கிறார்.

இவை தவிர ஜேம்ஸ் பாண்ட் மற்றும் ஹிட்ச்காக் திரைப்படங்களையும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்ததையும் அவர் அந்த குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். சமூக வலைத்தள செயலியான லெட்டர் பாக்ஸ் போலவே தன்னுடைய டைரி குறிப்புகளை எழுதி வைத்திருப்பது இணையதள வாசிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பலரும் அந்தப் பதிவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Baskar

Next Post

#Breaking : நீர்நிலையில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி...

Tue Feb 28 , 2023
நீர்நிலை, காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உரிமம் இல்லாத லாரிகள் மூலம் கழிவு நீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.. இதை தொடர்ந்து வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாட்களில் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.. அதில், குறிப்பாக சென்னை மற்றும் புறநகரில் கழிவு […]

You May Like