fbpx

உல்லாசத்திற்கு மறுப்பு.! கத்திரிக்கோலால் குத்தி இளம் பெண் படுகொலை.! லிவிங் ரிலேஷன்ஷிப்பில் நடந்த கொடூரம்.!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உல்லாசத்திற்கு மறுத்த இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பிரவீன் சிங் என்ற 24 வயது இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாக 20 வயது பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் மத்திய பிரதேசத்தின் ராவோஜி பஜார் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த கடந்த ஒன்பதாம் தேதி வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டை உடைத்து பார்த்தபோது இளம் பெண் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் செல்போன் ட்ராக்கிங் அடிப்படையில் பிரவீன் சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளம் பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனது காதலியை உல்லாசமாக இருப்பதற்கு அழைத்ததாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Next Post

பள்ளி வளாகத்தில் 3 ஆசிரியைகளுடன் உல்லாசம்.! ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோ.!

Thu Dec 14 , 2023
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் சக ஆசிரியைகளுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் குறித்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரம் மாநிலம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் தன்னுடன் பணியாற்றும் மூன்று ஆசிரியைகளுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருந்ததை வீடியோ […]

You May Like