fbpx

மத்திய அரசின் 3 சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் ஜூலை 6-ம் தேதி உண்ணாவிரத போராட்டம்…!

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து ஜூலை 6-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

திமுக சட்டத் துறை ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 29-ம் தேதி காணொலி வாயிலாக நடந்தது. திமுக சட்டத் துறை தலைவர் ஆர்.விடுதலை முன்னிலையில், செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் பங்கேற்றனர். மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து திமுக சட்டத் துறை சார்பில் ஜூலை 5-ம் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜூலை 6-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English Summary

A massive hunger strike on July 6 on behalf of the DMK against the 3 Acts of the central government

Vignesh

Next Post

இந்த 2 பேர்தான்!. இலங்கை தொடரில் புதிய பயிற்சியாளர் இருப்பார்!. ஜெய் ஷா அப்டேட்!.

Tue Jul 2 , 2024
These 2 people! There will be a new coach in the Sri Lanka series! Jai Shah Update!.

You May Like