fbpx

“தன் குழந்தைகளை தலையிலேயே அடித்து துடிதுடிக்க வெட்டிக்கொன்ற தாய்”! காவல்துறை தீவிர விசாரணை!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெற்ற தாயே தன் பிள்ளையை தலையில் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள பீஜாரா கிராமத்தைச் சார்ந்தவர் அஜித் யாதவ் இவரது மனைவி நீது. இந்த தம்பதிக்கு பாரி என்ற மகளும் ஹேப்பி மற்றும் ஹர்திக் என்ற மகன்களும் இருந்தனர். அஜித் யாதவ் ஜம்முவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பணிக்காக ஜம்முவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகளுடன் நீது மட்டும் அவருடைய கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு நீது வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தனது குழந்தைகளின் தலையை வெட்டி இருக்கிறார். இதில் தலை துண்டான நிலையில் இரண்டு மகன்களும் உயிரிழந்துள்ளனர். மகள் பாரி மட்டும் உயிர் பிழைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவம் குறித்து வந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதனால் தாயே குழந்தையை வெட்டி கொலை செய்தார் என்ன காரணம்? என்ற ரீதியில் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. காவல்துறைக்கு கிடைத்த முதல் கட்ட தகவல்களின்படி அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவர் என்றும் அதன் காரணமாக தன்னுடைய குழந்தைகளையே கொலை செய்திருக்கிறார் என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

Rupa

Next Post

அதிகாலையில் பயங்கரம்.... ஆட்டோவில் சென்ற பெண் கொடூரமாக வெட்டி படுகொலை! தடுக்க முயன்ற ஓட்டுநர் மீதும் சரமாரி தாக்குதல்

Mon Apr 10 , 2023
கோவில்பட்டி அருகே அதிகாலை ஆட்டோவில் சென்ற பெண்ணை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது . இந்தக் கொலையை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் தலையில் சராசரியாக வெட்டு விழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வாணரம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சண்முகராஜ் 33 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை இவர் தனது ஆட்டோவில் 30 […]

You May Like