fbpx

வாகன ஓட்டிகளே… சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியாக சென்னை ஐஐடி, தமிழக அரசு முன்னெடுக்கும் புதிய முயற்சி…!

ஐஐடி மெட்ராஸ்-ன் ஆர்.பி.ஜி. ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம், ‘வடிவமைப்பு சிந்தனை’ அணுகுமுறை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த முன்முயற்சியை சாலைப் பாதுகாப்பில் தொடர்புடைய தமிழ்நாடு அரசின் துறைகள் குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை அமல்படுத்த உள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு மற்றும் ஐஐடி மெட்ராஸ்-ன் சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் ஆகியவற்றுக்கு இடையே இந்த கூட்டு முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

இக்கூட்டு முயற்சியின் வாயிலாக அடையாளம் காணப்பட்ட விபத்து நிகழும் இடங்களில் தடயவியல் விபத்துத் தணிக்கைகளை நடத்துதல், மனித, வாகனம் மற்றும் சாலைகளின் சூழலைக் கருத்தில் கொண்டு விரிவான, விஞ்ஞான ரீதியான விபத்து விசாரணையை உருவாக்குதல், பாதுகாப்புக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான விபத்து விசாரணை அறிக்கை மற்றும் ஆபத்தான இடங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை புகைப்படங்களுடன் சமர்ப்பித்தல். அனுபவ ரீதியான ஆய்வுகளை நடத்துவதற்கான வடிவமைப்பு, தரவு சேகரிப்பில் இடைவெளியைக் கண்டறிதல், தரவுச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் தெளிவான நெறிமுறைகளை வகுத்தல்,  அமலாக்கத்திற்கான வியூகங்களை வகுக்க ஏதுவாக தரவு சார்ந்த மேம்பாட்டு முறைகளைப் பரிந்துரைத்தல் உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள் ஆகும்.

Also Read: தமிழக அரசு சார்பில் 9 முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் உதவித்தொகை…! எப்படி அப்பளை செய்வது…? முழு விவரம் இதோ…

Vignesh

Next Post

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Sat Jul 30 , 2022
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் CCTV Camera Installation-Repair & Service, Beauty Parlour and Domestic Electrical Appliances – Repair & Service பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிக்கு என ஏரளாமான காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 49 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது. இந்த […]

You May Like