fbpx

“அறிய வாய்ப்பு” ஆசிரியர்களுக்கு மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள்…! நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும்; 3, 188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.12,000  தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும், அதேபோல இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சிப் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத் தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் இடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலக மின்னஞ்சல் மூலமாக சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரி பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் 6-ம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “அடுத்த ஷாக் நியூஸ்” ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் ரூ.25லிருந்து ரூ.30 ஆக உயர்த்தப்படும்…! போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு…!

Vignesh

Next Post

#Admission: ME. M.Tech உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு...!

Tue Jul 5 , 2022
எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; 2022-2023 கல்வி ஆண்டில் சேருவதற்கான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் https://tanca.annauniv.edu/tanca22/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2022 தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு இடங்கள் […]

You May Like