fbpx

காணாமல் போன நகையை கண்டுபிடிக்க தவறியதால், மூதாட்டிக்கு புதிய சங்கிலி வாங்கிக்கொடுத்த காவல்துறை அதிகாரி..

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, பசம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி தொலைந்து போனதாக, ஒட்டப்பாலம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்திருந்தார்.. 2019 பிப்ரவரியில் எக்ஸ்ரே எடுப்பதற்காக ஓட்டப்பாலம் தாலுகா மருத்துவமனைக்கு அந்த மூதாட்டி சென்ற போது இந்தச் சம்பவம் நடந்தது.

எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போது, ​​சங்கிலியை கழற்றுமாறு தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், அதை தனது பர்ஸில் வைத்ததாகவும் தனது புகாரில் கூறியிருந்தார்.. எனினும், எக்ஸ்ரே எடுத்த பிறகு, அவள் பர்ஸைக் காணவில்லை என்றும் தெரிவித்திருந்தார்… ஆனால், சங்கிலி எப்படி தொலைந்தது என்பது குறித்து அந்த பெண்ணிடம் எந்த துப்பும் இல்லாததால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை. திருமணத்தின் போது கணவன் பரிசாக கொடுத்த சங்கிலி என்று அந்த மூதாட்டி கூறினார்.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த ஓட்டப்பாலம் போலீசார் முடிவு செய்து எக்ஸ்ரே மையத்தில் இருந்த ஊழியர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். மையத்திற்கு வந்த மற்ற நோயாளிகளிடமும் விசாரித்தனர், ஆனால் யாரும் நகையை பார்த்ததாக கூறவில்லை. சிசிடிவி இல்லாததால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.. எனினும் அந்த மூதாட்டி, தனது செயின் பற்றி விசாரிக்க அடிக்கடி ஸ்டேஷனுக்கு வருவார்.

இதற்கிடையில், எஸ்ஐ கோவிந்தபிரசாத், செப்டம்பர் 2020 இல் ஒட்டப்பாலம் ஸ்டேஷனில் சேர்ந்து விசாரணையை மேற்கொண்டார். இதுகுறித்து பேசிய கோவிந்தபிரசாத் “இந்த வழக்கில் நாங்கள் ஒரு விரிவான விசாரணையை மேற்கொண்டோம், எந்த நகையையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பெண் தனது பணப்பையை எங்கே வைத்திருந்தார் என்ற குறிப்பை எங்களுக்குத் தெரிவிக்க முடியவில்லை. இது திருட்டுச் சம்பவம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்தார்..

அவரின் சோகத்தையும், அவநம்பிக்கையையும் பார்த்தபோது, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுஜித்திடம் பகிர்ந்து கொண்டேன், அவர் புதிய செயின் வாங்குவதற்கான வாய்ப்பை ஆராய்ந்தார். காவல்நிலையத்தில் இருந்த காவல்துறையினர் மூதாட்டிக்கு புதிய செயின் வாங்கி கொடுக்க தங்கள் பங்களிப்பை வழங்க ஒப்புக்கொண்டனர்.” என்று கோவிந்தபிரசாத் மேலும் கூறினார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 31 அன்று, வழக்கின் நிலை குறித்து விசாரிக்க அந்த மூதாட்டி, மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்தார். அன்றைய தினம் கோவிந்தபிரசாத் பணி ஓய்வு பெறும் நாள் நாள். அன்றைய தினமே, கோவிந்தபிரசாத் புதிதாக வாங்கிய புதிய செயினை அந்த மூதாட்டிக்கு பரிசாக வழங்கினார்.. இதுகுறித்து பேசிய கோவிந்த பிரசாத் “எனது சேவையில் இது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும், மேலும் அந்த வயதான பெண்ணும் அதே மகிழ்ச்சியில் இருந்தார்” என்று கூறினார்…

Maha

Next Post

ஏப்ரல் மாதத்தில் இந்த 10 மாநிலங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை இருக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

Sun Apr 2 , 2023
நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை இருக்கும் […]

You May Like