fbpx

ஹாலிவுட் ஸ்டைலில் கொள்ளையர்களிடமிருந்து பைக்கை மீட்ட ஐடி ஊழியர்!

காணாமல் போன தனது பைக்கை  தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  ஐடி  ஊழியர் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர்வை சார்ந்த ஐடி ஊழியர் ஒருவரின்  பைக் சமீபத்தில் திருட்டு போனது. இதற்காக அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அவரை தனது பைக்கை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஐடி துறையில் பட்டதாரியான அவர்  ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது பைக்கை தானே கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அந்தக் கருவியின் உதவியுடன்  தனது பைக்  சென்னை ஆம்பூரில்  இருப்பதை அறிந்து கொண்டார் அவர் . பின்னர் அவர்களின் இருப்பிடத்தை அறிந்த ஐடி இளைஞர் காவல்துறை உதவியுடன்  கொள்ளையர்களை  பிடித்திருக்கிறார்.

கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதோடு தனது பைக்கையும் மீட்டு இருக்கிறார் அந்த இளைஞர். புகார் மட்டும் கொடுத்துவிட்டு  தனது பைக் கிடைக்கும் என்று இருக்காமல் தன்னுடைய புத்தி கூர்மையை பயன்படுத்தி  தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன்  ஐடி ஊழியர் பைக்கை கண்டுபிடித்த சம்பவம் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.  தற்போது தொழில்நுட்பம்  அடைந்திருக்கின்ற வளர்ச்சியின் காரணமாக எல்லாமே சாத்தியப்படும் என்பதை  இந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி இது போன்ற விஷயங்களையும் தற்போது  சாத்தியமாக்கி இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்காலத்தில் மக்கள் தவறான செயல்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது இளைஞர் ஒருவர் அதனை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்தி திருடு போன தனது பைக்கை அவரை கண்டுபிடித்து இருக்கிறார். அவரது பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியின் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது செல்போனில் உள்ள ஜிபிஎஸ் மூலம் தொடர்பு கொண்டு தனது பைக் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை  கண்டுபிடித்து இருக்கிறார் அந்த இளைஞர். தற்போது தகவல் தொழில் நுட்பமானது  ஜிபிஎஸ் கூகுள் மேப்  சேட்டிலைட் கம்யூனிகேஷன் என அபாரமான வளர்ச்சிகளை எட்டி இருக்கிறது.

Baskar

Next Post

திருச்சியில் பயங்கரம்: மேற்கு வங்க இளைஞரை குத்திக் கொன்ற திருச்சியின் பிரபல ரவுடி!

Wed Feb 8 , 2023
திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே  மேற்கு வங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு  இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து  திருச்சி கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு […]

You May Like