fbpx

#திருச்சி : பாட்டி இறந்த சோகத்தில் தனது உயிரையும் அன்றே மாய்த்துக் கொண்ட இளைஞர்..!

திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள திருவானைக்காவல் நெல்சன் ரோட்டில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கட்டும் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

நேற்று முன்தினத்தில் தினேஷ்குமாரை சிறுவயதிலிருந்து வளர்த்த பாட்டி பொன்னம்மாள்(75) என்பவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இறந்த பாட்டியின் உடலை பார்த்து கத்தி கதறி அழுத தினேஷ்குமார் சட்டென்று அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டுள்ளார். 

இதனை தொடர்ந்து நீண்ட நேரம் சென்ற பின்பும் வெளியே வராததால் சந்தேகமடைந்து அங்கு இருந்த குடும்பத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். தினேஷ்குமார் அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

களைகட்டிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! இன்று மோதும் அணிகள் எவை..?

Tue Nov 22 , 2022
களைகட்டியுள்ள கத்தார் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன. தங்கள் நாட்டு அணியை உற்சாகப்படுத்த கத்தாரில் குவிந்துள்ள கால்பந்து ரசிகர்களின் மத்தியில் அனல் பறக்கும் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் C பிரிவில் இடம் பெற்றுள்ள பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை எதிர்த்து சவுதி அரேபியா […]
களைகட்டிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! இன்று மோதும் அணிகள் எவை..?

You May Like