fbpx

திருவிழாவில் நாடகம் பார்க்க சென்ற இளம் பெண்; ஆளில்லா பகுதியில் கதற கதற நாசம் செய்த 7 சிறுவர்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருவிழாவின் போது நாடகம் பார்க்கச் சென்ற இளம் பெண்ணை ஐந்து சிறுவர்கள் உட்பட ஏழு பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் சமீபத்தில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அந்தத் திருவிழாவில் ஒரு நிகழ்வாக நாடகம் நடைபெற்று இருக்கிறது. அந்தப் பகுதியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் தனியாக சென்று நாடகம் பார்த்துவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஏழு பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளது. அந்தக் கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த பெண்ணை தூக்கிச் செல்லப்பட்டு அப்பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன் பிறகு அந்தப் பெண்ணைப் விட்டுவிட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்து இருக்கிறது. காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஐந்து பேர் 18 வயதிற்கும் குறைவான சிறுவர்களின் என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவலாக இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இளம் பெண்ணை சிறுவர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பகுதியில் உள்ள மக்களை மட்டுமல்லாது நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

’அண்ணா இது என்ன இடம்’..? சிறுமியை ஏமாற்றி வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்..!! பகீர் சம்பவம்

Mon Mar 6 , 2023
பெரம்பலூர் மாவட்டம் அரணார் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் மகன் முருகன் (29). இவர், வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமி ஒருவர், பல் வலி காரணமாக பெரம்பலூர் செல்ல வேண்டி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முருகன் சிறுமி செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விடுவதாகக் கூறி அழைத்துச் […]

You May Like