fbpx

முதல்வர் விளையாட்டு போட்டி..! தங்குமிடம் + உணவு அனைவரும் இலவசம்…! தமிழக அரசு அறிவிப்பு…!

44வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியின்‌ நிறைவு விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என அறிவித்தார்கள்‌. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ 2023ம்‌ மாதம்‌ முடிய நடைபெற்றது.

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில்‌ மூன்று இலட்சத்து எழுபத்து ஆறாயிரத்திற்கும்‌ மேற்பட்ட வீரர்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ கலந்து கொண்டனர்‌. மாவட்ட அளவிலான போட்டிகளில்‌ வெற்றி பெற்ற 27,000-க்கும்‌ மேற்பட்ட வீரர்‌ மற்றும்‌. வீராங்கனைகள்‌ மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்‌. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ சார்பில்‌ சென்னையில்‌ 17 இடங்களில்‌ ஜுலை 01-ந்‌ தேதி முதல்‌ ஜுலை மாதம்‌ 25-ந் தேதி வரை முதலமைச்சர்‌ கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளில்‌ பங்கேற்கவுள்ள 27,000க்கும்‌ மேற்பட்ட வீரர்‌-வீராங்கனைகள்‌,பயிற்றுநர்கள்‌, நடுவர்கள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ தேசிய மாணவர்‌ படை தன்னார்வலர்கள்‌ அனைவருக்கும்‌ போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும்‌ தங்குவதற்குஸவசதியாக தனியார்‌ விடுதிகள்‌ மற்றும்‌ அரசு விருந்தினர்‌ மாளிகை ஆகியவைகளில்‌ 2000க்கும்‌ மேற்பட்ட அறைகள்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌ மேலக்கோட்டையூரில்‌ உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல்‌ மற்றும்‌ விளையாட்டு பல்கலைக்கழகத்தில்‌ உள்ள மாணவ மாணவியர்‌ விடுதிகளில்‌ தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌ போட்டி நடைபெறும்‌ அனைத்து நாட்களிலும்‌ மூன்று வேளை உணவு மற்றும்‌ சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள்...! செப்டம்பர் 15ம் தேதியே கடைசி நாளாகும்...!

Fri Jun 30 , 2023
2024-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் 2023 ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 15ம் தேதியே கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ராஷ்ட்ரீய புரஸ்கார் தளத்தின் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன.பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் வழங்கப்படும் பத்ம […]

You May Like