fbpx

அப்படி போடு… இனி ஒரு மணி நேரம் முன்னதாக ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

ஆசிரியர்கள், பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் ,முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும். அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்னஞ்சலை திறந்து பார்க்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் காலை 10 மணி முதல் பள்ளி வேலை முடியும் வரை கண்காணிக்கப்பட்டு , படித்து பார்த்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பள்ளி தலைமையாசிரியர் பள்ளி வளாகம் கழிப்பறை மற்றும் வகுப்பறை ஆகியன தூய்மையாக உள்ளதா என்பதை சரி பார்த்து அதனை பராமரிக்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், பிற மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை சுயநிதி வகுப்பிற்கு பாடம் போதிக்க அனுமதிக்க கூடாது. ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் . அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது செல்போன் பேசிக் கொண்டிருந்தால் அந்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் . பள்ளியில் எந்த நிகழ்வும் நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலர் நேரடி கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் மாணவர்கள் அடித்துக் கொள்ளுதல், சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் நடைபெற்றால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில் தான் பத்திரிக்கை செய்தி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read;: பெண்களே… ரயில் பயணத்தின் போது உங்கள் பாதுகாப்பு இல்லையா…? உடனே இந்த எண்ணுக்கு கால் செய்யவும்…

Vignesh

Next Post

"குட் நியூஸ்" அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி திட்டம்...! இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்....!

Mon Jul 25 , 2022
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவிகள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002 -ம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவால் முதன்முதலில் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-2006 -ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு […]

You May Like