fbpx

#Breaking: பிரபல நடிகர் ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்…!

நடிகரும் இயக்குநருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார்.

பிரபல இயக்குனர் இராமதாஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‌இயக்குனர் இராமதாஸ் திரைக்கதை எழுத்தாளர், நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களிலேயே பணியாற்றியுள்ளார். வசூல் ராஜா MBBS, யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம், காக்கி சட்டை, மெட்ரோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற படத்தில் அறிமுகமான இவர் ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் ஆகிய படங்களை ராமதாஸ் இயக்கி உள்ளார். இந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

Vignesh

Next Post

தொழில் தொடங்க விருப்பமா..? மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்..!! ரூ.5 கோடி வரை..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

Tue Jan 24 , 2023
திருப்பூர் மாவட்டத்தில் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் கீழ் முதல் தலைமுறை […]
தொழில் தொடங்க விருப்பமா..? மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்..!! ரூ.5 கோடி வரை..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

You May Like