fbpx

“கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” புயல் பாதிப்பில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அதிரடி வேண்டுகோள்…!

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பால், உணவுபொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது X தளத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல், கனமழை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் & உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன‌. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார் .

Vignesh

Next Post

சீதாப்பழம் சுவையானது தான்.! அவற்றால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்ன என்று தெரியுமா.?

Thu Dec 7 , 2023
நம் நாட்டின் சீசன் பழ வகைகளில் முக்கியமான ஒன்று சீதாப்பழம். தித்திக்கும் சுவை கொண்ட இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. வைட்டமின்கள் சி மற்றும் ஏ, பொட்டாசியம், தாமிரம், மற்றும் நார்ச்சத்துக்கள் இந்த பழத்தில் நிறைந்திருக்கிறது. இது பல்வேறு நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஆனால் சிலருக்கு இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் உபாதைகள் மற்றும் அலர்ஜி ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பான விளக்கங்களை இந்த […]

You May Like