fbpx

தமிழகமே எதிர்பார்த்த ADMK வழக்கு..! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…! ஓபிஎஸ்-க்கு செக் வைத்த எடப்பாடி…!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கக்கோரி ஓ.பி.எஸ். தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை 11 அன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரியும், தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுவை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அரசு சார்பில் TRB தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்பொழுது...? முழு விவரம்

Tue Nov 28 , 2023
தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு (http://www.trb.tn.gov.in) என்ற இணையதளத்தில் 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கான இலவச […]

You May Like