fbpx

வாய்க்கு வந்ததெல்லாம் பேசினால், பல அந்தரங்கங்கள் வெளியே வந்துவிடும்….! உதயநிதியை எச்சரித்த முன்னாள் அமைச்சர்….!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த உதயநிதிக்கு தற்போது அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, நீங்கள் உங்கள் நாவை அடக்கி பேச வேண்டும். இல்லையேல், உங்கள் தந்தையை பற்றி பல்வேறு அந்தரங்கங்கள் வெளியிடப்படும் என்று எச்சரித்து இருக்கிறார்.

அதாவது, அதிமுகவின் பொன் விழா ஆண்டு குறித்த மாநாடு சென்ற வாரம் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த அதிமுகவின் நிர்வாகி ஒருவருடைய மனைவி, காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு நடுவே இது குறித்து, அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம், மயிலாடுதுறையில் நடந்த, திமுகவின் இளைஞர் அணி கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

அதாவது, அதிமுக மாநாட்டிற்கு வந்திருந்த நிர்வாகி ஒருவருடைய மனைவி காணாமல் போய் இருக்கிறாராம். தற்போது அது பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. முதலில் ஜெயக்குமாரை தான் விசாரிக்கப் போகிறார்களாம் என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலுக்காக பேசிய இந்த வார்த்தைகள், தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஒரு பொது மேடையில், ஒரு எதிர்க்கட்சியின் மூத்த தலைவரை, இப்படி நாகரீகம் இல்லாமல் விமர்சனம் செய்யலாமா? என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான், இந்த விவகாரம் குறித்து ஜெயக்குமாரிடம் பத்திரிகை நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், உதயநிதி மிகவும் தரம் தாழ்ந்து பேசி இருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கூட அரசியல் பக்குவம் இல்லை என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. ஏதோ வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சற்றே நாவை அடக்கி பேச வேண்டும். இத்துடன் நிறுத்திவிட்டால், நன்றாக இருக்கும் என்றும், இல்லையென்றால், உங்கள் தந்தையின் விஷயங்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்று தெரிவித்த அவர், முதலில் உங்கள் முதுகை திரும்பிப் பாருங்கள் என்று பேசி இருக்கிறார்.

Next Post

வரும் 31ஆம் தேதியே கடைசி..!! இதை செய்யாவிட்டால் சம்பளம் கிடையாது..!! அதிரடி காட்டிய மத்திய அரசு..!!

Mon Aug 28 , 2023
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதுதொடர்பான அரசாணை 2023-24 நிதியாண்டில் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில், கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இதுதான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, குளங்களை தூர்வாருவது, கால்வாய்களை பராமரிப்பது […]

You May Like