fbpx

“பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை..” “மக்கள் தான் நம்பிக்கை ” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக கட்சி மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வந்தது .

2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலிலும் 2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிட்டன. இந்த இரண்டு தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு படுதோல்வியே கிடைத்தது. மேலும் தமிழகத்தில் பாஜகவின் தலைவராக பொறுப்பேற்று அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வந்தார். இது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடனான அதிமுக கட்சியின் கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்தார். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுகவிற்கு கூட்டணி கதவுகள் திறந்து இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி இறுதியில் பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தும் நிலவி வந்தது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக அறிவித்திருக்கிறார். தொடர்பாக பேசிய அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் இனி ஒரு போதும் கூட்டணி இல்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். திமுக போன்ற கட்சிகள் கூட்டணியை நம்பி தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தார். மேலும் அதிமுக என்றும் மக்களை நம்பி களம் காணும் கட்சி எனவும் தெரிவித்துள்ளார்.

Next Post

60 மணி நேரத்திற்கு பின் வெளியான தேர்தல் முடிவுகள்.! 101 இடங்களை கைப்பற்றிய இம்ரான் கான் ஆதரவாளர்கள்.! ஆட்சியமைக்கப் போவது யார்.?

Sun Feb 11 , 2024
பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. 266 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த பொது தேர்தலில் 44 கட்சிகள் போட்டியிட்டன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியான பிடிஐ இந்தத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டனர். பொதுத்தேர்தல் வாக்குப்பதிவுகள் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இணையதள […]

You May Like