fbpx

#Alert..!! இடி மின்னலுடன் அச்சுறுத்தும் கனமழை..!! 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! அடுத்த லிஸ்ட் ரெடி..!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கேரள-தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

#Alert..!! இடி மின்னலுடன் அச்சுறுத்தும் கனமழை..!! 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! அடுத்த லிஸ்ட் ரெடி..!!

நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

#Alert..!! இடி மின்னலுடன் அச்சுறுத்தும் கனமழை..!! 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! அடுத்த லிஸ்ட் ரெடி..!!

மீனவர்களுக்கான எச்சரிக்கை…!!

13.11.2022: கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 – 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14.11.2022: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 – 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.11.2022: தென் கிழக்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.11.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 – 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

Chella

Next Post

BB Tamil..!! ’இப்போ அவரு கெட்ட பழக்கம் வச்சிருக்காரு’..!! காதலன் குறித்து கண்கலங்கி பேசிய ஷிவின்..!!

Sun Nov 13 , 2022
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் ஷிவின் கணேசன் தனது காதலன் குறித்து முதல்முறையாக கண் கலங்கி பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷிவின் கணேசன், மற்ற போட்டியாளர்களை போல, ஏனோ தானோ என்று விளையாடாமல் விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார். பொம்மை டாஸ்கின் போது அசீம், ஷிவினை மோசமாக இமிடேட் செய்து கிண்டலடித்த போதும் இவர், அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். இதனால், கமல்ஹாசனே இவரை பாராட்டினார். பிக்பாஸ் […]
BB Tamil..!! ’இப்போ அவரு கெட்ட பழக்கம் வச்சிருக்காரு’..!! காதலன் குறித்து கண்கலங்கி பேசிய ஷிவின்..!!

You May Like