fbpx

Uttar Pradesh: ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 14000 திட்டப் பணி…! அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி…!

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

Uttar Pradesh: இன்று காலை 10:30 மணியளவில், சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி தாம் கோவிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஸ்ரீ கல்கி தாம் கோவிலின் மாதிரியைப் பிரதமர் திறந்து வைத்து, இந்த நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். ஸ்ரீ கல்கி தாம் நிர்மான் அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி தாம் கோவில் கட்டப்படுகிறது. அதன் தலைவராக ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

பிப்ரவரி 2023-ல் நடைபெற்ற உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் போது பெறப்பட்ட முதலீட்டு முன்மொழிவுகளை தொடங்கி வைக்கும் விழாவில், பிற்பகல் 1:45 மணியளவில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முழுவதும் ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள 14000 திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.

உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி, விருந்தோம்பல், பொழுதுபோக்கு, கல்வி போன்ற துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவை. இந்த நிகழ்ச்சியில் முக்கியத் தொழிலதிபர்கள், சர்வதேச மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தூதர்கள், அதிகாரிகள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் உட்பட சுமார் 5000 பேர் கலந்து கொள்வார்கள்.

English Summary: Prime Minister Narendra Modi will launch 14000 projects across Uttar Pradesh worth more than ₹ 10 Lakh crore at the fourth ground-breaking ceremony of UP Global Investors Summit 2023 on Monday.

Read More: “தம்பி, ரீல் அந்து போச்சு.!” காவல்துறை வாகனத்தை பயன்படுத்தி Instagram reel எடுத்த நபர் கைது.!

Vignesh

Next Post

"தம்பி, ரீல் அந்து போச்சு.!" காவல்துறை வாகனத்தை பயன்படுத்தி Instagram reel எடுத்த நபர் கைது.!

Mon Feb 19 , 2024
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், காவல்துறையின் வாகனத்தை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் ரீல் (Instagram reel) எடுத்துள்ளார். காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்த நேரத்தை பயன்படுத்தி, அவர் அந்த ரீலை எடுத்தது தெரிய வந்தது. அந்த ரீல் வைரலான நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் உள்ள காஜியாபாத்தில், மொயின் கான் என்ற இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் எடுப்பதற்காக காவல்துறையின் […]

You May Like