2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி போட்டியிட இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வர இருக்கின்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அந்த கட்சியின் தேசிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி (Modi), பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய திறனாக கூட்டணி நான் ஒரு தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந்த மாநாட்டில் பேசிய அவர் நாட்டு மக்களுக்காக பாடுபடுவதையே தனது லட்சியமாக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். ஏழை மக்களின் கனவையே தனது கனவாக்கி நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனது வீட்டை நான் நினைத்திருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்க மாட்டேன் எனவும் தெரிவித்திருக்கிறார். ஏழைகள் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரின் கனவையும் எனது கனவாக நினைத்து நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசத்தின் வளர்ச்சி மட்டுமே தனது இலக்கு எனக் குறிப்பிட்ட அவர் இந்த நாட்டு மக்களின் ஆட்சி செய்ய வேண்டும் என்று மூன்றாவது முறையாக பிரதமராக விரும்பவில்லை. நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் நலனுக்காகவும் இந்த தேசத்தின் மக்களுக்காக சேவை செய்வதற்கும் பிரதமராக வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
English summary:
PM Modi gave a heart felt speech at the delhi conclave. He said living and serving as pm for poor peoples well being