Trump: அமெரிக்கா காசா பகுதியை உரிமையாக்கி அதை மறுவடிவமைப்பு செய்யும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்வதேச அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 2023 ஆண்டு அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களில் சிலரை போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் மீட்டது. மற்றவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்தார். இதற்காக தொடர்ந்து ஹமாசுடன் போரிட்டு வரும் இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்திவந்தது. ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரால் காசா பகுதியில் மட்டும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த சூழலில்தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ட்ரம்ப், நான் பதவி ஏற்பதற்குள் பிணையக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் வரலாற்றில் இதுவரை கண்டிராத பாதிப்பை ஹமாஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார். இந்த நிலையில், பிணை கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் காரணமாக 15 மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தத்தை தொடர்ந்தும், ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்தநிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டொனல்டு டிரம்ப், காசா முனையை அமெரிக்கா கைப்பற்றும் என்று அதிரடியாக பேசினார். பாலஸ்தீனத்தில் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா முனையை அமெரிக்கா கைப்பற்றும். பாலஸ்தீனியர்கள் வேறு இடத்தில் குடியேறிய பிறகு அந்த இடத்தை மேம்படுத்தி அதை சொந்தமாக்கி கொள்வோம். அங்கு உள்ள அனைத்து ஆபத்தான வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றப்படும்.
இதற்கு நாங்கள் பொறுப்பு. பொருளாதாரத்தை மேம்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம். தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக அப்பகுதியில் அமைதியை நிலையை நாட்டுவோம் என்று டிரம்ப் பேசியது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: பழைய ஓய்வூதிய திட்டம்… 9 மாதத்தில் அறிக்கை…! விரிவாக ஆராய குழு அமைத்தது தமிழக அரசு உத்தரவு…!