அமெரிக்காவில் பெண்ணை கொலை செய்து அவரது இதயத்தை சமைத்து உணவாகப் பரிமாறிய சைக்கோ கொலைகாரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியைச் சார்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். இவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருபது வருடங்கள் சிறை தண்டனை பெற்றார். ஆனாலும் மூன்று வருடங்களில் விடுதலையாகி தனது அத்தை மற்றும் மாமாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் சிறையிலிருந்து வெளிவந்த சில நாட்களிலேயே அப்பகுதியைச் சார்ந்த ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணை கொலை செய்து அவரது இதயத்தை எடுத்து உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்து தனது அத்தை மற்றும் மாமா ஆகியோருக்கு பரிமாறி இருக்கிறார் இந்த சைக்கோ கொலைகாரர்.
இந்த சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனது அத்தை மாமா மற்றும் ஒரு நான்கு வயது குழந்தையையும் இவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைப் பற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் ஆண்டர்சனை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.