fbpx

உஷார்.. வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்.. 13 கோடி அபேஸ்..!! அரசு அதிகாரி ஏமாந்தது எப்படி? பின்னணி என்ன?

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.13 கோடியை அபேஸ் செய்த சம்பவம், தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர், பொதுத்துறை நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 75 வயதான இவருக்கு, வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதன்படி முதலீடு செய்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அந்த மர்ம நபர்கள் குறிப்பிட்ட மொபைல் செயலி மூலம் 4 கோடி ரூபாயை முதலீடு செய்தார்.

ஒரு சில நாட்களிலேயே, அந்த முதலீடு பணம், 10 கோடியாக பெருகி விட்டது. குறிப்பிட்ட அந்த மொபைல் செயலியில் அவரது கணக்கில் 10 கோடி ரூபாய் பணம் இருப்பதாக காட்டியது. முதலீடு, லாபம் இரண்டையும் எடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர் முயற்சித்தார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. பதிலுக்கு, நீங்கள் ஜி.எஸ்.டி, சி.ஜி.எஸ்.டி, மாற்று வரி, அன்னியச் செலாவணி வரி மற்றும் பலவற்றைச் செலுத்தினால் தான் பணம் எடுக்க முடியும் என்று அதன் வாடிக்கையாளர் சேவை பிரிவில் தகவல் தெரிவித்தனர்.

போட்ட பணத்தையாவது எடுத்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில் சிறிது சிறிதாக மேலும் 9 கோடி ரூபாய் செலுத்தி விட்டார். ஆக மொத்தம் தன்னிடம் இருந்த 13 கோடி ரூபாயை முதலீடு செய்த பிறகு தான் அவருக்கு சந்தேகம் வந்தது. ‘பணம் அக்கவுண்ட்ல இருக்குது, ஆனா எடுக்க முடியலையே’ என்று நண்பர்களிடம் விசாரித்தார். அதனைத்தொடர்ந்து, காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.

அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மொத்தம் ரூ.13 கோடியில் ரூ.20 லட்சத்தை மட்டுமே போலீசாரால் மீட்க முடிந்தது. நாட்டில் தனி நபரிடம் நடந்த சைபர் கிரைம் மோசடிகளில் இதுவே மிகப்பெரியது என்று போலீசார் கருதுகின்றனர். யாரேனும் எங்களிடம் முதலீடு செய்யுங்கள் என்று கூறினால் உஷாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Read more ; 176 உயிர்கள்.. இந்தியாவை மண்டியிட வைத்த காந்தஹார் விமானக் கடத்தல் சம்பவம்..!! அன்று நடந்தது என்ன?

English Summary

An incident of cheating a retired government official of Rs 13 crore has taken place in Telangana.

Next Post

’நடிகைகளை ஒரு போதையாகவே பார்க்கின்றனர்’..!! புது குண்டை தூக்கிப் போட்ட சேரன் பட நடிகை..!!

Wed Sep 4 , 2024
Famous actress Padmapriya has criticized that 'Malayalam Actors' Association has no backbone'.

You May Like