ஆந்திர மாநிலத்தில் தனது கள்ளக் காதலியின் கணவரை கடத்திச் சென்று மொட்டை அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி என்ற பகுதியை சார்ந்த பெண்ணுக்கும் அப்பாராவ் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கிறது. இதனை அந்தப் பெண்ணின் கணவர் தட்டிக் கேட்டிருக்கிறார். அவரது மனைவியும் கள்ளக்காதலனும் இவர் சொல்வதை கேட்காததால் ஆத்திரத்தில் கள்ளக்காதலனின் புகைப்படத்தை “கண்ணீர் அஞ்சலி” என சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் தனது நண்பருடன் சேர்ந்து பெங்களூருவில் வேலை செய்த தனது கள்ளக்காதலையின் கணவரை சந்திரகிரிக்கு கடத்தி வந்திருக்கிறார். அவரை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று நண்பரும் கள்ளக்காதலனும் சேர்ந்து அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். மேலும் அந்த அப்பாவி கணவனின் தலை முடியை நீக்கி மொட்டை அடித்துள்ளனர். இதெல்லாம் போதாது என்று இனி உங்கள் விவகாரங்களிலேயே தலையிட மாட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என வீடியோவில் பேச வைத்து அதையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கின்றனர். அந்த அப்பாவி கணவனை அடித்து துன்புறுத்தியும் உள்ளனர். இவர்கள் பதிவேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறை அப்பாராவ் மற்றும் அவரது நண்பரை கைது செய்து அவர்களின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். அந்தப் பெண்ணின் கணவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.