fbpx

நேற்று திருச்செந்தூர்.. இன்று ராமேஸ்வரம்.. இன்னும் எத்தனை உயிர் பலி..? ஆலயங்களை விட்டு வெளியேறுங்கள்..!! – அண்ணாமலை காட்டம்

தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், ராமேஸ்வரம் திருக்கோவில்களில் பக்தர்கள் மூச்சி திணறி பலியான சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றைய தினம் திருச்செந்தூர் கோவிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் கோவிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

நேற்று திருச்செந்தூர் கோவிலில் உயிரிழந்த பக்தருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லை என்று சமாளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு , இன்று என்ன கதை வைத்திருக்கிறார்? கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்யாமல், கோவில் உண்டியல் பணத்தைக் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறது திமுக அரசு. மேலும், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் நிரந்தர ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாத அறநிலையத்துறைக்கு வாகனங்கள் வாங்கி அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.

குறிப்பாக, திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்காமல், வெளியே செல்லவும் அனுமதிக்காமல் அடைத்து வைத்து விட்டு திருப்பதி கோவிலில் 24 மணி நேரம் நிற்பான் என்று திமிராகப் பேசிய அமைச்சர் சேகர்பாபு தான். இந்த இரண்டு பக்தர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Read more: ’என் வீட்ல மாடு மேய்க்கிறதே இந்தி படிச்சவங்கதான்’..!! ’நாம் இந்தி படித்தால் பானிபூரி கடை தான் வைக்கணும்’..!! அமைச்சர் சர்ச்சை பேச்சு

English Summary

Annamalai has condemned the incident in which devotees died of suffocation at the Tiruchendur and Rameswaram temples in Tamil Nadu.

Next Post

"இந்தியாவின் மகள்.. உங்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்" பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்..!!

Tue Mar 18 , 2025
PM Modi wishes India's 'illustrious daughter' Sunita Williams a safe return

You May Like