fbpx

நாளை டெல்லி விரைகிறார் அண்ணாமலை..!! என்ன காரணம் தெரியுமா..? அரசியலில் பரபரப்பு..!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (ஆகஸ்ட் 04) டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும், இலங்கை கடற்படையின் கப்பல் மோதி மலைச்சாமி என்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்றைய தினம், புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மீனவர் பிரச்சனையை உடனடியாக தீர்வு காண மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மனு அளிக்க தமிழக மீனவர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்லவுள்ளார். அண்ணாமலையுடன் நாகை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதி மீனவர்களும் செல்கின்றனர்.

Read More : தீபாவளி பண்டிகை..!! நீங்களும் பட்டாசு கடை வைக்கணுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

It has been reported that Tamil Nadu BJP president Annamalai will visit Delhi tomorrow (August 04) to meet External Affairs Minister Jaishankar.

Chella

Next Post

சூப்பர்..!! வெறும் 9 நிமிடங்கள் சார்ஜ் போட்டால் போதும்..!! 965 கிமீ பயணிக்கலாம்..!! சாம்சங் நிறுவனத்தின் அசத்தல் பேட்டரி..!!

Sun Aug 4 , 2024
Samsung has produced a battery that can be fully charged in just 9 minutes and give a mileage of 965 km.

You May Like