பாஜக மாநில தலைவர் பஞ்சு சாட்டை நாடகம் வெட்ககேடானது, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவான செயல் என எம்.பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.பி கனிமொழி; பாஜகவின் மாநில தலைவர் பஞ்சு சாட்டை நாடகம் வெட்ககேடானது, தமிழ்நாட்டிற்கு தலைகுனிவான செயல். மத்திய நிதி அமைச்சர் ஒவ்வொரு முறையும் பேசும் போது ஒன்றை மறக்காமல் சொல்கிறார். அது இந்தி படிக்கவில்லை என்று, ஆனால் அவரது கல்வி சான்றிதழில் இந்தி படித்திருப்பதை மறைத்து கூறி வருகிறார். அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய குற்றவாளி ஆவார். அப்பொழுதே அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த தவறை செய்திருக்க மாட்டார்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காத அதிமுகவினர் இன்று நின்று கொண்டு கூவுகிறார்கள். திமுக ஒரு மாநில கட்சியாக நினைத்துக் கொள்ளக்கூடிய இடத்தில் இல்லை. நாட்டின் தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் உள்ளது. அதனை தீர்மானிக்கக் கூடியவர் முதலமைச்சர் ஸ்டாலின். நீங்கள் சுதந்திரமாக நீங்கள் நினைத்தபடி வாழக்கூடிய சமூகத்தை தான் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்றார்.