fbpx

Missing CM.? வைரலான அண்ணாமலையின் ஹேஸ் டேக்.! ட்ரெண்டிங் செய்யும் பிஜேபி.!

தமிழகம் முழுவதும் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வட மாநிலங்களை தாக்கிய புயல் மற்றும் கனமழை தற்போது தென் மாவட்டங்களை தாக்கி இருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போயிருக்கிறது

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலின் குறித்து கூறியிருக்கும் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களின் நம்பிக்கையை பெற தவறிவிட்டார் என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அதிகார பலத்தின் மூலமாகவும் விளம்பரங்களின் மூலமும் கட்டமைக்கப்பட்ட அரசின் உண்மையான முகம் தற்போது வெளியில் வந்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் புயல் மற்றும் கனமழையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் உடைமைகளை இழந்து உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் முதல்வர் அவர்களை சந்திக்காமல் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. இது ஒரு பொறுப்பான முதல்வருக்கு அழகு அல்ல எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக தனது கருத்தை சமூக வலைதளமான X-ல் பதிவு செய்திருக்கும் அவர் #MissingCm என்ற ஹேஸ் டேக்கையும் பதிவு செய்து இருக்கிறார். இதனை தற்போது பிஜேபி கட்சி உறுப்பினர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

Next Post

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது..!! இன்று மேலும் 49 பேர் சஸ்பெண்ட்..!!

Tue Dec 19 , 2023
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 30 எம்.பி.க்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, செல்வம் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட 31 எம்.பி.க்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்களின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் […]

You May Like