பெண்களே ரூ.50,000 பணம் வேண்டுமா..? மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த சூப்பர் திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெண்களின் நலனுக்காகவும், வளமான வாழ்வுக்காகவும் மத்திய அரசு விதவிதமான அறிவிப்புகளையும், திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. இப்படி திட்டங்களை அறிவிப்பதுடன் மட்டுமல்லாமல், அந்த திட்டங்களில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் அன்னபூர்ணா யோஜனா திட்டம். ஆண்களுக்கு நிகராக பெண்களும், அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கேற்றபடி, சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்தபடியே வருகிறது. இந்த பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதாலும், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய பிரச்சனையாக இருப்பதாலும் பல பெண்கள் சுயமாக தொழில் தொடங்க வழியில்லாமல் உள்ளனர். இவர்களுக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் அன்னபூர்ணா யோஜனா. மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ.50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்க இந்த தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கடனுக்கு அப்ரூவல் வந்தபிறகு முதல் தவணையை செலுத்த தேவையில்லை. கடனை எளிய தவணை முறையில் 36 மாதங்கள் அதாவது 3 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தலாம். சந்தை நிலவரம், வங்கி ஆகியவற்றைப் பொறுத்து வட்டி விகிதம் மாறக்கூடும். அந்தவகையில், கேட்டரிங் ஆரம்பிக்க விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.50,000 கடனாக வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read More : மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!