ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முனி சந்திரா என்பவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு முனி ராதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு தேவனாஸ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினத்தில் உறவினர் மகேஷ் என்பவர் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தார். அப்போது முனிசந்திரா தனது மகனுடன் அந்த பகுதிக்கு சென்றார். சிறுவன் டிராக்டரில் ஏற வேண்டும் என்று அழுது கொண்டே இருந்தான்.
எனவே, சிறுவனை அந்த டிராக்டரில் தந்தை தூக்கி அமர வைத்துள்ளார். வேக வேகமாக உலுக்கி, உலுக்கி டிராக்டர் உழுது கொண்டிருந்தபோது சிறுவன் திடீரென சேற்றில் விழுந்த நிலையில், அப்போது சூழலும் ரோட்டோ வேட்டர் கலப்பையில் மூன்று துண்டுகளாக சிதறி சிறுவன் பலியாகி இருக்கின்றான்.
தந்தையின் கண் முன்னே உடல் சிதறி சிறுவன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.