fbpx

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! – முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அந்த வகையில் அண்மையில் ஜாமினில் வெளிவந்து மீண்டும் தமிழக மின்சார துறை அமைச்சரான செந்தில் பாலாஜியை கோவையின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி,

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைஅமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Read more ; தக்காளியுடன் போட்டி போடும்  வெங்காயம் விலை..!! காய்கறி சந்தையில் ஒரு கிலோ இவ்வளவா? – இல்லத்தரசிகள் அதிர்ச்சி

English Summary

Appointment of responsible ministers district wise across Tamil Nadu.

Next Post

வெற்றி மகுடம் சூடினார் வினேஷ் போகத்.. ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி..!!

Tue Oct 8 , 2024
Jhulana constituency Congress candidate Vinesh Phogat has been declared victorious

You May Like