fbpx

தமிழகமே… 24-ம் தேதி கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு…! அன்றே போட்டிகள் நடைபெறும்…

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் 24.01.2024-அன்று திறந்து வைக்க உள்ளார்கள். அன்றைய தினம் (24.01.2024) மேற்படி கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ளது.

மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 19.01.2024-ஆம் தேதி மதியம் 12.00 மணி முதல் 20.01.2024-ஆம் தேதி மதியம் 12.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற் தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

Vignesh

Next Post

கோர சம்பவம்!… படகு கவிழ்ந்ததில் 14 மாணவர்கள் பலி!… குஜராத்தில் சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த சோகம்!

Fri Jan 19 , 2024
குஜராத்தில் சுற்றுலா சென்ற போது ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 14 பேர் 2 ஆசிரியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் அமைந்துள்ள ஹர்னி மோத்நாத் ஏரிக்கு பள்ளி மாணவர்கள் நேற்று சுற்றுலா சென்றனர். மாலையில், ஏரியை சுற்றிப் பார்க்க 27 மாணவர்களும், 4 ஆசிரியர்களும் படகில் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிக பாரம் தாங்காமல் படகு […]

You May Like