fbpx

யாரும் அதை செய்யாதீங்க… பாஜக தொண்டர்களுக்கு வானதி ஸ்ரீனிவாசன் வேண்டுகோள்…!

வழக்கம் போல தங்கள் மடைமாற்றும் அரசியலை துவக்கியுள்ள திமுகவினருக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில், தான் நட்புரீதியாக கூறிய கருத்துக்களை I.N.D.I கூட்டணிக் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக பொய்யாக திரித்துக் கூறி விளம்பரப்படுத்துவதை நினைத்து வருந்திய, அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்களே, தாமாக முன்வந்து தான் அப்படிப் பேசியிருக்க கூடாது என்று கூறியதை, வழக்கம்போல் திரித்துப் பேசி அரசியல் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.

மேலும், நமது மத்திய நிதியமைச்சர் அவர்களும், “GST பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். ஆனால், பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்மணியின் உணவுப் பழக்கத்தை இப்படி பொதுவெளியில் பேசு பொருளாக்கலாமா?” என்று தனது வருத்தத்தைத் தான் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதில் யாரும் தனது அதிகாரத்தையோ அரசியல் பொறுப்பையோ முன்னிறுத்தி எதுவும் பேசவில்லை.

ஆனால், பரம்பரை பரம்பரையாக பொய் பிரச்சாரத்தின் மூலம் வெறுப்பரசியல் செய்யும் I.N.D.I கூட்டணிக் கட்சிகள், இந்த விவகாரத்தை தங்கள் இஷ்டம் போல திரித்து பொய் அவதூறுகளைப் பரப்ப முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதனால் இந்த விவகாரத்தை மேற்கொண்டு தொடராமலும், யார் மனதையும் புண்படுத்தாமலும் இருக்க பாஜக தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

English Summary

As usual, BJP MLA Vanathi Srinivasan has condemned the DMK who have started their politics of change.

Vignesh

Next Post

எச்சரிக்கை!. 9-10 வயதிலேயே மாதவிடாய்!. சோப்பு முதல் அழகு சாதனப் பொருட்கள் வரை!. அதிர்ச்சி காரணங்கள்!.

Sat Sep 14 , 2024
Warning: Young Girls Starting Their Periods at an Early Age - Shocking Reasons Revealed

You May Like