அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் படி உள்ள மாணவர் எண்ணிக்கை & EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை CRC அளவில் உறுதி செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் படி உள்ள மாணவர் எண்ணிக்கை & EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை 100% சரியாக இருப்பதை CRC அளவில் உறுதி செய்ய வேண்டும். மேலும் மாணவர் எண்ணிக்கை வருகை பதிவேட்டிற்கும் & EMIS இணைய தளத்தில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பின் உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும்.
பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள Raise Request & Admission Approval – pending இருப்பின் ஆசிரியர் பயிற்றுநர்கள் DC மூலம் உடனடியாக சரி செய்ய வேண்டும். மாணவர்கள் Long Absent எனில் வேறு பள்ளிகளில் சேர்ந்து இருப்பின் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மாணவனை Common Pool ற்கு அனுப்பிட வேண்டும். மேற்கண்ட பணிகளை உடனடியாக முடித்திட வேண்டும். ஆசிரியர் பயிற்றுநர்கள் தங்கள் குறுவளமையத்திற்குட்பட்ட பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை & EMIS இணைய தளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கையும் சரியாக உள்ளதை குறுவளமைய அளவில் முகாம் நடத்தி சரிபார்க்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் மாணவர் வருகைப் பதிவேடு & பள்ளியின் EMIS இணைய தளத்தினை சரிபார்த்து 100% சரியாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை களைவதற்காக இப்பணி மேற்கொள்ளப்படுவதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் மாணவர் விவரம் 100% EMIS இணைய தளத்தில் சரியாக உள்ளது என சான்றிதழ் அளிக்க வேண்டும்.