fbpx

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம்…! சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு..!

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் 22ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் 22ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் செனடாப் சாலை, டர்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியர்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னர் இடது/வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடை செய்யப்படும், அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை, வழியாகச் சென்று பின்னர் சேமியர்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

ஜி.கே.எம் பாலம் செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும், மேலும் காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல், ரத்னா நகர் பிரதான சாலையும் செனடாப் சாலையிலிருந்து ஒரு வழி பாதையாக இருக்கும், அண்ணாசாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை, மேலும் அண்ணாசாலையில் இருந்து செனடாப் 1வது தெருவிலிருந்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் செனடாப் 1வது பிரதான சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.

கோட்டூர்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்படும், அதற்கு பதிலாக இவ்வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம் பாலம் சர்வீஸ் சாலையில் சென்று டர்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணாசாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சீரான போக்குவரத்தினை உறுதி செய்வதற்காக அண்ணாசாலை, செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச்சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Attention motorists… Traffic changes from today…! Chennai Metropolitan Police announcement

Vignesh

Next Post

உங்க வீட்ல இன்வெர்ட்டர் இருக்கா..? அப்படினா இந்த இடத்தில் மட்டும் மறந்தும் வெச்சிறாதீங்க..!! மொத்தமா முடிஞ்சிரும்..!!

Sun Apr 20 , 2025
Inverter problems can occur for many reasons. The most important one is the location of the inverter in your home.

You May Like