தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. ஆகவே தற்போது டெங்கு காய்ச்சலை ஆயுர்வேதத்தின் மூலமாக தடுக்கலாமா? என்பது குறித்த சந்தேகத்திற்கான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைவதன் காரணமாகத்தான், இந்த டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடுவதன் மூலமாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என்று கூறப்படுகின்றது.
துளசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், துளசி இலை, கருப்பு மிளகு போன்றவற்றை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, நாள்தோறும் பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும், பப்பாளி இலைகளை எடுத்து, அதிலிருந்து சாறு பிழிந்து அதனை பருகி வந்தால், டெங்கு காய்ச்சல் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. அதே போன்று, இதனை தொடர்ந்து செய்து வந்தால், உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நெல்லிக்காயை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சல் முதல், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.