சமீப காலமாக குழந்தைகளின் மரணம் அதிகரித்து வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், பெற்றோரின் கவனக் குறைவு தான். வீட்டில் குழந்தைகள் இருந்தால், நாம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆபத்தான பொருள்களை குழந்தைகளுக்கு எட்டும் இடத்தில் வைக்க கூடாது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எப்பொழுதும் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் சில பெற்றோர் இதை செய்வது இல்லை. சில பெற்றோர் அஜாக்கிரதையாக இருப்பதால் குழந்தைகளின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பண்ருட்டி அடுத்துள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபுதேவா. இவருக்கு ஒன்றரை வயதான யாழினி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 5-ம் தேதி யாழினியை குளிக்க வைப்பதற்கு, அவரது தாயார் வழக்கம் போல் சுடுதண்ணீர் வைத்துள்ளார். ஆனால் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சோப் எடுக்க சென்று விட்டார். அப்போது, சுடுதண்ணீர் என்று தெரியாமல் குழந்தை சுடுதண்ணீரை தன் மீது ஊற்றிக்கொண்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாய் ஓடி வந்துள்ளார். ஆனால் அதற்குள், குழந்தைக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது.
இதையடுத்து, குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: கவனம்!!! ஒரே போன் காலில், ரூ.17 லட்சத்தை இழந்த நடிகை..