பேங்க் ஆஃப் இந்தியா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Credit Officers, IT Officer பணிகளுக்கு என மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கும் SC, ST, PWD விண்ணப்பதாரர்களுக்கு 800 ரூபாய் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 25.02.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: https://bankofindia.co.in/documents/20121/8561835/Webnotice+2022-23_3+%28Notice%29.pdf