fbpx

BEL நிறுவனத்தில் ரூ.10,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprenticeship Training-க்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 72 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=GAPP%20TAPP%20Advt%20-%2014-12-2022.pdf

Vignesh

Next Post

பதைபதைக்கும் வீடியோ: திருமண விழாவில் நடனமாடும்போது மயங்கி விழுந்து பெண் மரணம்!!!

Sat Dec 17 , 2022
தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு காரணமாக நொடியில் நிகழும் மரணம் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதிலும், விழாக்களில் நடனமாடிக்கொண்டிருக்கும் போது, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது என பொது நிகழ்ச்சிலேயே இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் டிசம்பர் 14 இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் 4,5 பெண்கள் மேடையில் நடனமாடுகின்றனர். அப்போது நடனமாடும் 60 வயது […]

You May Like