fbpx

கர்ப்பப்பை புண், நீர்கட்டி போன்ற நோய்களையும் துரத்தி ஓட வைக்கும் துத்தி இலை..! எப்படி பயன்படுத்தலாம்.!

பொதுவாக காய்கறிகள், கீரைகள் போன்றவை அனைத்துமே உடல் நலத்திற்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியத்தை ஏற்படுத்தக் கூடியது. இதில் கீரைகளை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கீரைகளில் முக்கியத்துவமானதாக கருதப்பட்டு வரும் துத்தி இலை கீரை நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

ஆனால் இந்தக் கீரையை பலரது வீடுகளிலும் சமைப்பதில்லை. துத்தி கீரை ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். உடல் வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்கள், சூட்டுநோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த துத்தி இலை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

துத்தி இலை கீரையை வாரத்திற்கு ஒருமுறை அரைத்து பச்சையாக குடித்து வந்தால் மூல நோய் விரைவில் குணமடையும். மேலும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், சிறுநீரகத்தில் கற்கள், வாய் புண், குடல் புண் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. அரிசி மாவுடன் துத்தி இலையை, சாறு எடுத்து கலந்து உடலில் பூசி வந்தால் தோலில் ஏற்பட்டுள்ள புண்கள், அடிபட்ட காயங்கள் விரைவில் குணமடையும்.

குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான கர்ப்பப்பையில் புண், நீர்கட்டிகள், சிறுநீர் பாதையில் தொற்று, மாதவிடாயின் போது கடுமையான வயிற்று வலி போன்றவைகளை குணப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய துத்தி இலை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Rupa

Next Post

உடல் எடையை குறைக்க இந்த 6 பழங்களை கண்டிப்பாக சாப்பிடுங்க போதும்.!?

Sun Feb 11 , 2024
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகமாக இருப்பது பலருக்கும் பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடை அதிகமாவதால் உடலில் பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைப்பதற்கும் பல்வேறு வகையான வழிமுறைகள் இருந்து வந்தாலும் ஒரு சிலருக்கு அதனை பின்பற்ற முடியவில்லை.  அப்படிப்பட்டவர்கள் இந்த 6 பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். 1. ஆப்பிள் –  நீர் சத்து மற்றும் நார்ச்சத்து […]

You May Like