fbpx

பாரதியார் பல்கலைகழகத்தில்,10,000 ரூபாய் சம்பளத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….!

பாரதியார் பல்கலைக்கழகம் சார்பாக அந்த பல்கலைக்கழகத்தில், காத்திருக்கும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள் குறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற full time project assistant பணிக்கான காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு அறிவிப்பை அந்த பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதோடு, அந்த பணிக்கு ஒரே ஒரு காலி பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் MSc பட்டம் பெற்றிருப்பது மிகவும் அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதேபோன்று, M,Sc, e learning technology, M.A educational communication, MSc electronic media போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல, இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ஒன்றுக்கு, 10,000 ரூபாய் ஊதியமாக பெறுவார்கள் என்று அந்த பல்கலைக்கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த நபர்கள் தங்களுடைய முழுமையான தகுதி விவரங்களோடு மற்றும் முழுமையான ஆவணங்களோடு வரும் 5.10.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் பங்கேற்று கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Next Post

“62 வயசுல உனக்கு இத்தன தடவ உடலுறவு கேக்குதா?” உடலுறவுக்காக முதியவர் செய்த கொடூரம்..

Wed Oct 4 , 2023
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் 62 வயதான பெருமாள். விவசாயம் செய்து வரும் இவருக்கு 55 வயதான தனம் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் மற்றும் மகளுக்கு திருமணமான நிலையில், பெருமாளும் தனமும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பெருமாள், தினமும் தனது மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே […]

You May Like