டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுமையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டுமென அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள தயாராக இருந்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அதேபோல், பல மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற அக்கட்சியின் தலைவர் அண்ணாமலையையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து, அவரை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கது! ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுமையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா? திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என கூறியிருந்தார்.
Read more: மாப்பிள்ளை பார்க்க வருவது போல் நடித்து 8 சவரன் தங்க நகைகள் அபேஸ்..!! 4 பெண்கள் கைது